A.K.M. Ramzy / 2020 டிசெம்பர் 13 , மு.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
டெல்லி விவசாயிகள் போராட்டத்தைத் தீவிரப்படுத்தப் போவதாக போராட்டக்குழுவினர் சில நாள்களுக்கு முன்பு அறிவித்தனர்.
இந்நிலையில் டிசம்பர் 14ஆம் திகதி ஒரு நாள் உண்ணா விரதத்தில் ஈடுபடப்போவதாக விவசாயிகள் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
அது மட்டுமில்லாமல், ராஜஸ்தானில் இருந்து டெல்லி வரும் ஜெய்பூர் - டெல்லி நெடுஞ்சாலை யிலும் விவசாயிகள் டெல்லி சலோ போராட்டத்தை மேற்கொள்ளப்போவதாகவும், ஞாயிற்றுக்கிழமை 11 மணிக்கு விவசாயிகள் ஷஹஜன்பூரில் இருந்து பயணத்தைத் தொடங்குவார்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்கம் மீண்டும் பேச விரும்பினால் நாங்கள் தயாராக உள்ளோம். ஆனால், முதலில் அந்த மூன்று சட்டங்களை திரும்பிப் பெறுவது குறித்து விவாதிக்கவேண்டும் என்று விவசாயிகள் தலைவர்கள் தெரிவித்தனர்.
5 minute ago
10 minute ago
15 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
10 minute ago
15 minute ago