2025 ஜூலை 16, புதன்கிழமை

பாராளுமன்றத்தில் ஜூலை 25 பதவி ஏற்க உள்ளார் கமல்ஹாசன்

Editorial   / 2025 ஜூலை 15 , பி.ப. 01:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாநிலங்களவைக்குத் தமிழ்நாட்டில் இருந்து  திராவிட முன்னேற்ற கழகம் தலைமையிலான கூட்டணி சார்பில் (திமுக) தேர்வாகியுள்ள நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் பாராளுமன்றத்தில் வரும் ஜூலை 25 ஆம் திகதி மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்கவுள்ளார்.

இது குறித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் "மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற மாநிலங்களவை (ராஜ்ய சபா) தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன், மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.

 தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்குத் தேர்வான வைகோ, பி.வில்சன், சண்முகம், எம்.எம்.அப்துல்லா, அன்புமணி மற்றும் சந்திரசேகரன் ஆகியோரது பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, 6 இடங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, திமுக, அதிமுக, ம.நீ.ம.வைச் சேர்ந்த 6 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டனர். திமுக சார்பில் பி.வில்சன், கவிஞர் சல்மா, சிவலிங்கம், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆகியோரும், அதிமுக சார்பில் தனபால், ஐ.எஸ்.இன்பதுரை ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X