2025 ஜூலை 12, சனிக்கிழமை

போலிச் சாதி சான்றிதழ் பெற்ற நடிகைக்கு அபராதம்

A.K.M. Ramzy   / 2021 ஜூன் 09 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

மும்பை:

லோக்சபா தேர்தலில் போட்டியிட வேட்புமனுவில் போலி சாதி சான்றிதழ் கொடுத்த வழக்கில் தெலுங்கு நடிகையும் சுயேட்சை  எம்.பி.,யுமான நவனீத் கௌருக்கு மும்பை உயர்நீதிமன்றம்   இரண்டு இலட்சம் ரூபா அபராதம் விதித்துள்ளது.

தெலுங்கு நடிகை நவ்னீத் கௌர்,35, தமிழில் அரசாங்கம், அம்பாசமுத்திரம் அம்பானி போன்ற படங்களில் நடித்துள்ளார்.

2019 லோக்சபா தேர்தலில் அமராவதி லோக்சபா தனி தொகுதியில் சுயேட்சை எம்.பி.யாக போட்டியிட்டார். இவருக்கு காங்கிரஸ்  தேசிய வாத காங்கிரஸ்  கட்சிகள் ஆதரவு அளித்தையடுத்து வெற்றி பெற்று லோக்சபா எம்.பி.யானார்.

இந்நிலையில் இவரிடம் தோல்வியுற்ற சிவசேனா கட்சி வேட்பாளர் ஆனந்தராவ் , மும்பை உயர் நீதிமன்றல் நாக்பூர் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

அதில் நவ்னீத் கௌர், தன்னை பட்டியலினத்தவர் என போலியான சாதி சான்றிதழ் கொடுத்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அவரிடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த வழக்கின்   விசாரணை மும்பைஉயர்நீதிமன்றில் இன்று நடந்தது. இதில் நவ்னீத் கௌரின் சாதி சான்றிதழை ஆய்வு செய்ததில், அது போலியானது என நிரூபனமானது.

இதையடுத்து அவரது சாதி சான்றிதழை ரத்து செய்த உயர்நீதிமன்றம், ரூ. 2 இலட்சம் அபராதம் விதித்தும், ஆறு வாரங்களுக்குள் நவ்னீத் கௌர் அனைத்து ஆவணங்களையும், நீதிமன்றத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .