2026 மார்ச் 08, ஞாயிற்றுக்கிழமை

பாஜகவை விட பெரிய திருடர்கள் கிடையாது

A.K.M. Ramzy   / 2020 டிசெம்பர் 16 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாஜகவை விட பெரிய திருடர்கள் யாரும் கிடையாது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்று மம்தா  மேலும் உரையாற்றுகையில்;

"நாங்கள் மேற்கு வங்க மக்களுக்காகப் பணியாற்றியுள்ளோம். அவர்கள் எப்போதும் எங்களைத் திருடர்கள் என்றே குற்றம் சாட்டுவார்கள்.

ஆனால், பாஜகவை விட பெரிய திருடர்கள் யாரும் கிடையாது.  அவர்கள் மிகப் பெரிய கொள்ளைக் காரர்கள்.

ஹிந்து, முஸ்லிம், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்துவர்கள் இடையே வேறுபாட்டை ஊக்குவிப்பார்கள். இதைத் தான் அவர்கள் செய்வார்கள்.

கடந்த 6 வருடங்களாக அவர்கள் டில்லியில் ஆட்சியில் உள்ளனர். 2014, 2016 மற்றும் 2018 தேர்தல்களில் ஜல்பாய்குரி-அலிபுர்தாரில் தேநீர் தோட்டங்கள் அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்தனர்.

வாக்குறுதியை நிறைவேற்றினார்களா? 2014 மற்றும் 2019 தேர்தல்களில் ஆண்டுக்கு 2கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என வாக்குறுதி அளித்தனர்.

குறைந்தது 2 இலட்சம் வேலைகளையாவது அவர்கள் கொடுத்தார்களா? 2014 தேர்தலில் அனைவரது வங்கிக் கணக்கிலும் ரூ. 15 இலட்சம் செலுத்தப்படும் என வாக்குறுதி அளித்தனர்.

நிறைவேற்றினார்களா? அவர்கள் பொய் வாக்குறுதிகளை மட்டுமே அளிப்பார்கள்."


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .