A.K.M. Ramzy / 2020 டிசெம்பர் 22 , பி.ப. 02:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
விராலிமலை:
பிரிட்டனிலிருந்து சென்னை வந்த நபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாக, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
பிரிட்டனிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்த பயணியை தனிமைப்படுத்தி அவரின் மாதிரி மரபியல் சோதனைக்காக புனேவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. சோதனை முடிவு வந்தால் தான் அவர் புதிய வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளரா என்பது தெரிய வரும். அதுவரை பொதுமக்கள் பதட்டமும் பீதியும் அச்சமும் அடையத் தேவை இல்லை என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டப் பேரவைத் தொகுதிக்குட்பட்ட ராஜகிரியில் ஒளி மயமான வாழ்வு இலவச கண் சிகிச்சை முகாமை தொடங்கி வைக்க வந்த மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், கடந்த பத்து நாள்களில் லண்டனிலிருந்து தமிழகத்தில் உள்ள சர்வதேச விமான நிலையங்களுக்கு வந்த ஆயிரத்து 88 பேர் கண்காணிக்கப்பட்டு முழு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர், பிரிட்டனிலிருந்து விமானம் மூலம் வந்த 15 பேரை சோதனை செய்ததில் ஒருவருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .
56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
1 hours ago