A.K.M. Ramzy / 2021 ஜனவரி 02 , பி.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவில் இருந்து பிரித்தானியாவுக்கு ஜனவரி 8 ஆம்திகதி முதல் மீண்டும் பயணிகள் விமானங்கள் இயக்கப்படும் என்று விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்தார்.
பிரித்தானியாவில் புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இந்தியாவில் இருந்து அந்நாட்டுக்கு கடந்த டிசம்பர் 23 ஆம் திகதி முதல் பயணிகள் விமான சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.
ஜனவரி 7 ஆம் திகதி வரை அந்நாட்டுக்கு விமான சேவை நிறுத்திவைக்கப்படுவதாக விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம் அறிவித்தது.
இந்நிலையில் ஜனவரி 8 ஆம் திகதி முதல் அந்நாட்டுக்கு இந்தியாவில் இருந்து மீண்டும் பயணிகள் விமானங்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
16 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
1 hours ago
1 hours ago