2025 ஜூலை 17, வியாழக்கிழமை

புருவத்தால் விவாகரத்து

Freelancer   / 2023 நவம்பர் 02 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூர் பாட்ஷாஹி நகரைச் சேர்ந்த இளம்பெண், கடந்த 2022-ம் ஆண்டு பிரயக்ராஜைச் சேர்ந்த ஒருவரைத் திருமணம் செய்து கொண்டார். அவரது கணவர் சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வருகிறார். இந் நிலையில், கான்பூரில் உள்ள திருமண நிகழ்ச்சியில் அந்த இளம்பெண் கலந்து கொண்டுள்ளார்.

அப்போது அந்த பெண்ணுக்கு அவரது கணவர் சவுதி அரேபியாவில் இருந்து வீடியோ அழைப்பு மேற்கொண்டுள்ளார். அப்போது அந்த பெண் தனது புருவத்தைத் திருத்தியிருந்ததை பார்த்த கணவர் ஏன் புருவத்தைத் திருத்தினாய் என்று கேட்டு கண்டித்துள்ளார். அத்துடன் வீடியோ அழைப்பை துண்டித்து தொலைபேசியில் அழைத்து மனைவிக்கு தலாக் கூறியுள்ளார்.

இதனால் பாதிக்கப்பட்ட இளம்பெண், பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து, பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X