Ilango Bharathy / 2022 ஏப்ரல் 04 , மு.ப. 11:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில், புதிய மோட்டார் சைக்கிள் ஒன்று வெடித்துச் சிதறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குண்டக்கல் அருகே கசாபுரத்தில் உள்ள ஒரு கோயிலுக்கு அருகேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவ தினத்தன்று தனது மோட்டார் சைக்கிளை அதன் உரிமையாளர் குறித்த கோயிலுக்கு அருகே நிறுத்திவிட்டு பூஜை செய்த போது எதிர்பாராத விதமாக அம்மோட்டார் சைக்கிளில் தீ பிடித்து எரிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து உரிமையாளர் தீயை அணைக்க முயன்றபோது தீயைக் கட்டுப்படுத்தமுடியாமல் போனதாகவும், சில நொடிகளிலேயே மோட்டார் சைக்கிள் வெடித்துச் சிதறியதாகவும் கூறப்படுகின்றது.
இதனால் பல அடி உயரத்திற்கு தீப்பிழம்பு எழவே அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்து வெளியான வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago