2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

பெண்ணுக்கு எமனான காகம்

Editorial   / 2021 ஒக்டோபர் 19 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

பூந்தமல்லி,

திருவேற்காடு அடுத்த மாதிராவேடு, மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் உபேந்திரன். இவருடைய மனைவி இலட்சுமி பிரியா (வயது 29). இவர், தனது வீட்டின் அருகில் உள்ள தடுப்பு சுவர் இல்லாத 2-வது மாடியில் காகத்துக்கு சோறு வைக்க நேற்று முன்தினம் சென்றார்.

அப்போது எதிர்பாராதவிதமாக 2-வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து விட்டார். இதில் படுகாயம் அடைந்த லட்சுமி பிரியாவை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், லட்சுமி பிரியா ஏற்கனவே இறந்து விட்டதாக தெவித்தனர். இதுபற்றி திருவேற்காடு பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .