Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2021 ஓகஸ்ட் 05 , மு.ப. 07:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழகத்தில் நீரிழிவுநோய் , இரத்த அழுத்தம், சிறுநீரகச் செயலிழப்பு போன்ற நோய்களால் 20 இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் அரச வைத்தியசாலைகளை நாடுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நோயாளிகளில் பலர் முறையாகச் சிகிச்சை எடுத்துக் கொள்ளாததால் ஆண்டுக்குச் சராசரியாக 5 இலட்சம் பேர் மரணம் அடைகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைக் கருத்தில் கொண்டு தமிழகத்தில் `மக்களைத் தேடி மருத்துவம்` என்ற மகத்தான திட்டத்தை அரசு செயல்படுத்த உள்ளது.
இத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிராமப் பகுதியில் இன்று (05) ஆரம்பித்து வைக்கவுள்ளார். இதன் மூலம் நோயாளிகளைத் கண்டறிந்து அவர்களுக்கு வீடு வீடாகச் சென்று மாதந்தோறும் தேவையான மருந்துகள் மற்றும் சிகிச்சைகளை வழங்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago