Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.K.M. Ramzy / 2021 செப்டெம்பர் 07 , மு.ப. 09:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை:
திருவொற்றியூர் பகுதியில் 'வேலைக்குச் சென்றும் சம்பளம் இல்லை என்றால் எப்படி குடும்பம் நடத்துவது' என மனைவி திட்டியதால் மானமுள்ள கணவன் தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருவொற்றியூர் பகுதியில் வேலாயுதம் நகரைச் சேர்ந்த நபர் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
குறித்த நபர் ராயபுரத்தில் உள்ள தனியார் அச்சகத்தில் வேலை பார்த்து வந்தார். தினசரி வேலைக்கு சென்ற நிலையிலும் இவருக்குக் கடந்த சில மாதங்களாகவே அந்நிறுவனத்தில் சம்பளம் கொடுக்கப்படவில்லை.
இதனால்,வீட்டில் கணவன் மனைவிக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. வேலைக்குச் சென்றும், சம்பளம் இல்லை என்றால் எப்படி குடும்பம் நடத்துவது எனக் கேட்டு, மனைவி அவரிடம் சண்டை போட்டுள்ளார்.
இந்த நிலையில், மன உளைச்சலில் இருந்த கணவன் நேற்று காலையில் தூங்கச் செல்வதாகக் கூறி படுக்கை அறைக்குச் சென்று, கதவைச் சாத்திக் கொண்டுள்ளார்.வெகு நேரமாகியும் அவர் வெளியில் வரவில்லை.
இதனால் உள்பக்கம் தாழிடப்பட்டிருந்த கதவை உடைத்துப் பார்த்தபோது, கணவன் உயிரை மாய்த்துக் கொண்டது தெரிய வந்தது. இதையடுத்து திருவொற்றியூர் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்,
8 minute ago
14 minute ago
17 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
14 minute ago
17 minute ago
54 minute ago