A.K.M. Ramzy / 2021 ஓகஸ்ட் 08 , மு.ப. 09:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

சிம்லா:
இமாசல பிரதேச மாநிலம், சிர்மாவுர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரு தனியார் பஸ் வண்டியொன்று பயணிகளுடன் மலைப்பாங்கான பகுதியிலுள்ள தேசிய நெடுஞ்சாலையூடாகப் பயணித்துக் கொண்டிருந்தது.
ஷில்லாய் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென பஸ்ஸின் டயர்களில் ஒன்று வெடித்து தறிகெட்டு ஓடி சாலைத் தடுப்புகளை இடித்துத் தள்ளிவிட்டு பள்ளத்தாக்கில் கவிழும் நிலை உருவானது.
இதன்போது பஸ்ஸின் பாதி கவிழ்ந்த நிலையில், பயணிகள் அச்சத்தில் அலறினர்.
ஆனால், பஸ்ஸின் சாரதி மிக நேர்த்தியாக, துரித கதியில் செயல்பட்டு பாரிய விபத்தைத் தவிர்த்து பயணிகளை மயிரிழையில் காப்பாற்றினார்.
மீட்பு படையினர் விரைந்து வந்து பயணிகளை பத்திரமாக மீட்டனர். திறமையாக செயல்பட்டு சாதித்த சாரதிக்குப் பாராட்டுகள் குவிந்தன.
11 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
2 hours ago
2 hours ago