A.K.M. Ramzy / 2021 ஜூலை 04 , மு.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

ராசிபுரம்:
கையடக்கபேசிகளின் சிக்னல் கிடைக்காததால், மரத்தில் ஏறி மாணவர்கள், 'ஒன்லைன்' வகுப்பை கவனிக்கின்றனர்.
நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை ஒன்றியம் முள்ளுக்குறிச்சி அருகே பெரப்பஞ்சோலை, பெரியகோம்பை ஊராட்சிகள் உள்ளன. இங்கு, 20க்கும் மேற்பட்ட மாணவர்கள், கல்லுாரி, பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர். தற்போது ஊரடங்கு காரணமாக பாடசாலைகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதனால், ஒன்லைன் வாயிலாக பாடம் நடத்தப்படுகிறது.
பெரப்பஞ்சோலை, பெரியகோம்பையில் சிக்னல் டவர்கள் இல்லை. பேசுவதற்கே சரியாக சிக்னல் கிடைக்காது. பாடம் சம்பந்தப்பட்ட வீடியோ, ஒன்லைன் வகுப்புகளை கவனிக்க வேண்டும் என்றால், 5 கி.மீ., தூரம் உள்ள பகுதிக்கு செல்ல வேண்டும். இதனால், மாணவர்கள், அந்த கிராமத்தில் உயரமாக உள்ள ஆலமரத்தின் கிளைகள் மீது அமர்ந்து, ஒன்லைன் வகுப்புகளைக் கவனித்து வருகின்றனர்.
தினமும் காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை உயிரை பணயம் வைத்து, ஒன்லைன் வகுப்பில் பங்கேற்பது, மாணவர்களின் பெற்றோரை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த ஓராண்டாகவே இப்பகுதி மாணவர்கள், ஆல மரத்தில் அமர்ந்து தான் வகுப்புகளை கவனித்து வருகின்றனர். மாணவர்களின் நலன்கருதி, அப்பகுதியில் டவர் அமைக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
7 minute ago
49 minute ago
49 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
49 minute ago
49 minute ago
2 hours ago