A.K.M. Ramzy / 2020 டிசெம்பர் 14 , பி.ப. 02:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரக்யா சிங் தாக்கூர் 'நான்கு வர்ணங்கள்' குறித்து தெரிவித்த கருத்தால் மீண்டும் சர்ச்சைக்கு உள்ளாகி யுள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம் சீஹோரில் நடந்த ஒரு நிகழ்வில், இந்து மத நூல்களில் உள்ள நான்கு வர்ணங்கள் (பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர்) குறித்து பேசியபோது அவர் பேசிய காணொளி சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
"ஒரு சத்திரியரை சத்திரியர் என்று அழைத்தால் அவர் தவறாக நினைப்பதில்லை; ஒரு பிராமணரை பிராமணர் என்று அழைத்தால் அவர் தவறாக நினைப்பதில்லை; ஒரு வைசியரை வைசியர் என்று அழைத்தால் அவரும் தவறாக நினைப்பதில்லை;
ஆனால் ஒரு சூத்திரரை சூத்திரர் என்று அழைத்தால் அவர்கள் தவறாக நினைக்கிறார்கள். அதற்கு என்ன காரணம் என்றால், அவர்கள் புரிந்து கொள்வதில்லை," என்று பிரக்யா தாக்கூர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .