2026 மார்ச் 08, ஞாயிற்றுக்கிழமை

மு.க.ஸ்டாலினுக்கு திடீரென சுகயீனம்

A.K.M. Ramzy   / 2020 டிசெம்பர் 12 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொளத்தூர் ரெட்டேரி பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை மு.க.ஸ்டாலின் நிவாரண உதவிகளை வழங்கினார். அப்போது திடீரென அவருக்கு உடல்சோர்வுற்று மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இரத்த அழுத்தம் அதிகமானதால் அவருக்கு மயக்கம் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டு, அதற்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில் பூரண குணமடைந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் மு.க.ஸ்டாலின் கூறியது: நிகழ்ச்சியில் பங்கேற்றபோது உடல் சோர்வாக இருந்தது. மயக்கமும் ஏற்பட்டது. மருத்துவமனையில் இரத்தம் அழுத்தம், ஈசிஜி உள்ளிட்ட பரிசோதனைகள் செய்துகொண்டேன். தற்போது நலமாக உள்ளேன். மருத்துவர்கள் 10 நிமிடம் ஓய்வில் இருந்துவிட்டு செல்லுமாறு கூறினர். அதன்படி ஓய்வில் இருந்துவிட்டு வந்தேன் என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .