2026 மார்ச் 08, ஞாயிற்றுக்கிழமை

மோடியும் ஹசீனாவும் ரயில் பாதை திறப்பு

A.K.M. Ramzy   / 2020 டிசெம்பர் 17 , பி.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுடெல்லி

பிரதமர் நரேந்திர மோடியும் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும் இன்று ஹல்திபரி-சிலாஹதி ரயில் பாதையைத் திறந்து வைத்தனர்.

 2020ஆம் ஆண்டு  மார்ச்சில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க முஜிப் பார்ஷோவின் போது பிரதமர் நரேந்திர மோடி காணொளிக் காட்சி செய்தி ஒன்றை அனுப்பினார்.  

இதன் தொடர்ச்சியாக பிரதமர் நரேந்திர மோடி, வங்கதேச நாட்டின் பிரதமர் ஷேக் ஹசினா ஆகியோருக்கு இடையிலான மெய்நிகர் உச்சி மாநாடு  இன்று நடைபெற்றது.

இருதரப்பு உறவுகள், குறிப்பாக கொரோனாவுக்கு பிந்தைய காலத்தில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பான அனைத்து அம்சங்கள் குறித்தும் இரண்டு தலைவர்களும் உச்சி மாநாட்டில் விரிவாக விவாதித்தனர்.

இதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியும் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும் இன்று ஹல்திபரி சிலாஹதி ரயில் பாதையை ஆகியோர் திறந்து  வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து சிலாஹதியில் இருந்து ஹால்திபரி வரை சரக்கு ரயில் இயக்கப்படுகிறது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .