A.K.M. Ramzy / 2020 நவம்பர் 25 , பி.ப. 12:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
லவ் ஜிஹாத்தில் சிவசேனா மென்மையான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதாக தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
திருமணத்துக்காக மதம் மாறுவது செல்லாது என்று அலஹாபாத் உயர் நீதிமன்றம் அண்மையில் உத்தர விட்டது. இந்த உத்தரவை சுட்டிக் காட்டி, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத், லவ் ஜிஹாத்தை தடுக்க புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்று ஏற்கெனவே உறுதி அளித்துள்ளதாகக் கூறினார்.
லவ் ஜிஹாத் குறித்து மகாராஷ்டிரா ஆட்சியின் கூட்டணி தலைமையில் உள்ள சிவசேனா நிலைப்பாடு மென்மையாக இருப்பதாக பாஜக கூறியுள்ளது.
சமீபத்தில் பிஹாரில் ஏதேனும் லவ் ஜிஹாத் சட்டத்தை அமுல்படுத்தும் திட்டம் இருக்கிறதா என்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவுத் பாஜக-ஐக்கிய ஜனதா தள ஆட்சியைக் குறிவைத்து கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சிவசேனா ஒரு காலத்தில் காதலர் தினக் கொண்டாட்டங்களுக்கு எதிராக கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததற்கும், காதல் ஜோடிகளை அடிப்பதற்கும் பெயர் பெற்றது. ஆனால் தற்போது சிவசேனா நேர்மாறாக செயல்பட்டு வருகிறது.
சிவசேனா தற்போது லவ் ஜிஹாத் குறித்து தனது கருத்தில் மென்மையான நிலைப்பாடுகளையே கொண்டுள்ளது.
சிவசேனாவின் தற்போதைய நடவடிக்கைகள் மூலம் அதன் நிலைப்பாடு காரணமாக அந்தக் கட்சி எவ்வளவு மாறிவிட்டது என்பதையே இது காட்டுகிறது.
54 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
1 hours ago
2 hours ago