2025 ஜூலை 17, வியாழக்கிழமை

விடுதலை செய்ய நடவடிக்கை

Freelancer   / 2023 ஒக்டோபர் 30 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டார் நாட்டில் உள்ள தாஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் என்ற தனியார் நிறுவனத்தில் இந்திய கடற்படையில் ஓய்வுபெற்ற கேப்டன்கள் 8 பேர் பணியாற்றி வந்தனர். இந்த நிறுவனம் கட்டார் ஆயுதப்படையினருக்கான பயிற்சி உள்பட பல்வேறு சேவைகளை அளித்து வருகிறது.


இந்நிலையில் இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரிகளான 8 பேரும் இஸ்ரேலுக்கு ஆதரவாக உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் 8 இந்தியர்களுக்கும் மரண தண்டனை விதித்து கட்டார் நீதி மன்றம் தீர்ப்பு அளித்தது.
 

இந் நிலையில் கட்டாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 இந்தியர்களின் குடும்பத்தினரை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்தார்.

இது தொடர்பாக சமூக வலைதளமான தனது எக்ஸ் தளத்ததில், “கட்டாரில் கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 இந்தியர்களின் குடும்பத்தினரை சந்தித்தேன். இந்த வழக்குக்கு அரசு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக அவர்களிடம் தெரிவித்தேன். அவர்களது கவலைகள் மற்றும் வலிகளை முழுமையாக பகிர்ந்து கொள்கிறோம். அவர்களை விடுதலை செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் அரசு தொடர்ந்து மேற்கொள்ளும் என்று அவர்களிடம் உறுதி அளிக்கப்பட்டது” என பதிவிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X