A.K.M. Ramzy / 2021 மே 19 , பி.ப. 02:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

சென்னை
நடிகர் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து அதன் பொதுச்செயலாளர் முருகானந்தம் உட்பட பலர் விலகியிருக்கிறார்கள்.
சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைமையிலான கூட்டணி போட்டியிட்ட சகல தொகுதிகளிலும் தோல்வியடைந்தது. இதன் பிற்பாடு நடந்த கூட்டத்தில் மகேந்திரன், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ்பாபு உட்பட பலரும் இராஜினாமா செய்தனர்.
இதில் பதவி விலகிய மகேந்திரன் கமல்ராஜன் ஜனநாயக முறையில் செயல்படவில்லை என்று குற்றம்சாட்டினார். இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளர் பதவி வகித்து வந்த முருகானந்தம் பதவி விலகியிருக்கிறார். அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகியிருப்பதாகக் கூறி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
7 minute ago
49 minute ago
49 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
49 minute ago
49 minute ago
2 hours ago