2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

விளையாடிய மகன்: உயிரை மாய்த்த தாய்

Ilango Bharathy   / 2023 பெப்ரவரி 09 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்தவர் `தேவேந்திரன்`. 22வயதான இவர் தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிந்து வருகின்றார்.

இவர் `ஒன்லைன் ரம்மி ` விளையாட்டுக்கு அடிமையானவர் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் அண்மையில் தேவேந்திரன், தான் பணிபுரிந்து வரும் நிறுவனத்தில் இருந்து 3 லட்சம் ரூபாவைக்  கையாடல் செய்து அதனைக் கொண்டு ரம்மி விளையாட்டில் ஈடுபட்டுள்ளார் எனக் கூறப்படுகின்றது.

இதைத்தொடர்ந்து திருடிய பணத்தை தேவேந்திரன் திருப்பி செலுத்தாததால் அந்நிறுவனம் இது குறித்து பொலிஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

 இது தொடர்பாக தேவேந்திரனின் பெற்றோர் பணத்தை விரைவில் ஒப்படைத்து விடுவதாக பொலிஸ் நிலையத்தில் உத்தரவாதம் அளித்ததாகத்  தெரிகின்றது.

இதற்கிடையே தேவேந்திரன் தலைமறைவாகி விட்டதால் பணத்தை கட்டமுடியாமல் மன உளைச்சலுக்கு ஆளான அவரது தாயார்  நேற்று முன்தினம் தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார் .

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .