A.K.M. Ramzy / 2021 ஜனவரி 04 , மு.ப. 08:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதுடெல்லி
புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் கடுங் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் விவசாய பிரதிநிதிகளுடன் மத்திய அரசு இன்று 7ஆவது கட்ட பேச்சுவார்த்தையை நடத்தவுள்ளது.
மத்திய அரசு தரப்பில் 6 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட போதிலும், சுமுக முடிவு ஏதும் எட்டப் படவில்லை.
எனினும், கடந்த வாரம் நடந்த 6ஆவது கட்ட பேச்சுவார்த்தையில் விவசாயிகளின் சில கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுக் கொண்டது.
பயிர் கழிவுகளை எரிக்கும் விவசாயிகளுக்கு அபராதம் விதிக்கும் மசோதா, விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எனக் கருதப் பட்ட மின்சார அவசர சட்டம் ஆகிய இரண்டையுமே திரும்பப் பெற மத்திய அரசு ஒப்புக் கொண்டது.
எனினும், வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்பாக மத்திய அரசு எந்த அறிவிப்பையும் வெளியிட வில்லை.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து ஆலோசிப்பதற்காக விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் 7ஆவது கட்ட பேச்சுவார்த்தையை மத்திய அரசு இன்று நடத்துகிறது.
மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல், வர்த்தகத் துறை இணையமைச்சர் சோம் பர்காஷ் ஆகியோர் தலைமை வகிக்கும் இந்த பேச்சுவார்த்தையில் 41 விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
11 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
1 hours ago
1 hours ago