A.K.M. Ramzy / 2020 டிசெம்பர் 09 , மு.ப. 06:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
தூத்துக்குடி
திருச்செந்தூரில் பாஜக வெற்றிவேல் யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்ற 300 பெண்கள் உள்ளிட்ட 1000 பேர் மீது பொலிஸார் மூன்று பிரிவுகளின் கீழ், வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தமிழக பாஜக சார்பில் வெற்றிவேல் யாத்திரை நிறைவு விழா திருச்செந்தூரில் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், முன்னணி நிர்வாகிகள் சுதாகர் ரெட்டி, இல,கணேசன், எச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், வி.பி.துரைசாமி, குஷ்பு, கரு.நாகராஜன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மண்டபத்துக்குள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் முக்கிய நிர்வாகிகள் மட்டும் இருந்த நிலையில், மண்டபத்துக்கு வெளியே பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பாஜக தொண்டர்கள் 1000இக்கும் மேற்பட்டோர் கூடியிருந்தனர்.
இந்நிலையில் கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறி கூட்டம் நடத்தியதாக பாஜகவினர் மீது திருச்செந்தூர் பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
54 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
1 hours ago
2 hours ago