A.K.M. Ramzy / 2020 டிசெம்பர் 18 , மு.ப. 06:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதுடில்லி:
புதிய வேளாண் சட்டங்களில் உள்ள சிறப்பம்சங்கள் குறித்து மத்திய பிரதேச விவசாயிகளிடையே பிரதமர் நரேந்திர மோடி இன்று வெள்ளிக்கிழமை உரையாற்றுகிறார்.
இதுகுறித்து மத்திய பிரதேச மக்கள் தொடர்புத் துறை அதிகாரி ஒருவர் வியாழக்கிழமை கூறியதாவது:
மத்திய பிரதேச மாநில அரசு சார்பில் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி, ரெய்சன் மாவட்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்ச்சியில், பயிர் சேதத்தால் பாதிக்கப்பட்ட 35.50 இலட்சம் விவசாயிகளுக்கு ரூ.1,600 கோடி நிவாரணத் தொகை, அவர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்படும்.
அதைத் தொடர்ந்து, பிற்பகல் 2 மணியளவில் பிரதமர் மோடி காணொளி முறையில் உரையாற்றுகிறார். அப்போது,புதிய வேளாண் சட்டங்களில் உள்ள விவசாயிகள் பயன்பெறும் சிறப்பம்சங்கள் குறித்து அவர் விவரிக்கவுள்ளார் என்று அந்த அதிகாரி கூறினார்.
5 minute ago
10 minute ago
15 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
10 minute ago
15 minute ago