Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 பெப்ரவரி 11 , பி.ப. 03:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
அடுத்த பத்தாண்டுகளில் தென்னாப்பிரிக்காவிலிருந்து 100 சிறுத்தைகளுக்கு மேல் இந்தியாவுக்கு அனுப்புவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கைச்சாத்திட்டுள்ளதாக தென்னாபிரிக்க அரசாங்கம் அறிவித்துள்ளது.
'சிறுத்தையை மீண்டும் அறிமுகப்படுத்துவதில் ஒத்துழைப்பு' என்ற தலைப்பில் சமீபத்தில் முடிக்கப்பட்ட ஒப்பந்தத்தின் படி, 2023 பெப்ப்ரவரியில் தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு 12 சிறுத்தைகளின் ஆரம்பத் தொகுதியை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, 2022ஆம் ஆண்டு நமீபியாவில் இருந்து இந்தியாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட எட்டு சிறுத்தைகளுடன் இந்த சிறுத்தைகள் இணையும் என்று தெரிவிக்கப்படுகிறது.
பெப்ரவரியில் 12 சிறுத்தைகள் இறக்குமதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அடுத்த 8 முதல் 10 ஆண்டுகளுக்கு ஆண்டுதோறும் மேலும் 12 சிறுத்தைகளை இடமாற்றம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தென்னாபிரிக்க அரசாங்கத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மதிப்பாய்வு செய்யப்படும் என்றும், அது பொருத்தமானதாக இருப்பதை உறுதிசெய்யும் என்றும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் ஐந்து பெண் மற்றும் மூன்று ஆண் சிறுத்தைகள் உட்பட எட்டு சிறுத்தைகள் கடந்த ஆண்டு செப்டம்பர் 17ஆம் திகதி அறிமுகப்படுத்தப்பட்டன.
அதிக வேட்டையாடுதல் மற்றும் வாழ்விட இழப்பு உள்ளிட்ட சில காரணங்களால் சிறுத்தைகள் இந்தியாவிலிருந்து முற்றிலுமாக அழிக்கப்பட்டன. 1952 ஆம் ஆண்டு நாட்டில் சிறுத்தை அழிந்துவிட்டதாக அரசாங்கம் அறிவித்தது.
1970 களில் தொடங்கி, நாட்டில் அதன் வரலாற்று எல்லைகளில் இனங்களை மீண்டும் நிறுவும் இந்திய அரசாங்கத்தின் முயற்சிகள் நமீபியாவுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வழிவகுத்தது.
9 minute ago
12 minute ago
16 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
12 minute ago
16 minute ago