Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
Mithuna / 2024 ஜனவரி 10 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜார்க்கண்ட் மாநிலம், தன்பாத்தில் சரஸ்வதி தேவி (வயது 85). நான்கு குழந்தைகளுக்கு தாயான இவரது கணவன் 1986ம் ஆண்டு இறந்துவிட்டார். அதன் பின்னர் தனது வாழ்நாளை பயபக்தியுடன் கடவுள் ராமருக்கே அர்ப்பணித்தார். இதையடுத்து சரஸ்வதி தேவி நாடு முழுவதும் உள்ள பல்வேறு கோயில்களுக்கு புனித யாத்திரை மேற்கொள்வதை வழக்கமாக வைத்திருந்துள்ளார்.
1992 டிசெம்பர் 6-ம் திகதி பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, ராமரின் தீவிர பக்தரான அங்கு ராமர் கோயில் கட்டப்படும் வரை மௌன விரதம் இருக்கப்போவதாக சரஸ்வதி தேவி, உறுதிபூண்டார். 2020 வரை தினமும் 23 மணி நேரம் மௌன விரதமும், மதியம் 1 மணி நேரம் பேசிக்கொண்டும் இருந்திருக்கிறார். 2020-ல் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்ட பின் 24 மணிநேரமும் மௌன விரதம் இருந்துள்ளார்.
மௌன விரதத்தின்போது குடும்ப உறுப்பினர்களிடம் பேச சைகை மொழியையும், கடினமான சொற்களைப் பேச காகிதத்தில் எழுதிக் காண்பிப்பதையும் வாடிக்கையாக கொண்டிருந்துள்ளார்.
இந்நிலையில் ராமர் கோவில் திறப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக, சரஸ்வதிதேவி ரயில் மூலம் அயோத்தி சென்றுள்ளார். ராமர் பிரதிஷ்டை செய்யப்பட்டதும் அவரது மௌன விரதத்தை முடிவுக்கு கொண்டு வருவார் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago