A.K.M. Ramzy / 2020 டிசெம்பர் 12 , மு.ப. 07:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை
நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது70 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இந்நிலையில், ‘தி இந்து’ குழுமத்தின் ‘தமிழ் திசை’ பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘சூப்பர் ஸ்டார் 45’ சிறப்பு மலரை நேற்று ரஜினிகாந்த் மகிழ்ச்சியோடு பெற்றுக்கொண்டார்.
‘அபூர்வ ராகங்கள்’ திரைப்படத்தின் மூலம் நடிகர் ரஜினிகாந்த் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி, கடந்த ஆகஸ்ட் 15ஆம் திகதியுடன் 45 ஆண்டுகள் ஆகின்றன. துணை நடிகர், வில்லன், சிறப்பு தோற்றம் என தன் திரைப் பயணத்தை தொடங்கிய ரஜினி, தன் அபாரத் திறமையால் அடுத்த 5 ஆண்டுகளிலே முன்னணி கதாநாயகனாக மாறினார்.
அடுத்தடுத்த அமோக வெற்றியால் ‘சூப்பர் ஸ்டார்’ அந்தஸ்தைப் பெற்ற ரஜினிகாந்த், ஏறக்குறைய 40 ஆண்டுகளாக எவராலும் அசைக்கமுடியாத சக்தியாக விளங்குகிறார்.
காலங்கள் மாறி, வயது கூடினாலும் தமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகிலும் சூப்பர் ஸ்டாராக திகழ்கிறார் ரஜினிகாந்த்.
இதை அவரது ரசிகர்கள் ‘ரஜினியிஸம்’ என கொண்டாடும் நிலையில், ‘தமிழ் திசை’ பதிப்பகம், ‘சூப்பர் ஸ்டார் 45’ என்ற தலைப்பில் பிரமாண்டமான சிறப்பு மலரைவெளியிட்டுள்ளது.
260 பக்கங்கள் கொண்ட ‘சூப்பர் ஸ்டார் 45’ மலரில் ‘அபூர்வ ராகங்கள்’ முதல் ‘அண்ணாத்த’ வரையிலான ரஜினியின் திரைப்பயணம் அங்குலம் அங்குலமாக தொகுக்கப்பட்டுள்ளது.
மூத்த இயக்குநர் எஸ்பி.முத்துராமன், மாஸ் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா, இயக்குநர் கே.பாலசந்தரின் மகள் புஷ்பா கந்தசாமி உள்ளிட்ட பன்முக ஆளுமைகளின் பேட்டி, கட்டுரைகளின் வாயிலாக ரஜினியின் திரைவாழ்வை விவரித்திருக்கிறார்கள்.
5 minute ago
10 minute ago
15 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
10 minute ago
15 minute ago