Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2011 செப்டெம்பர் 26 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றைய பலன்கள் (27.09.2011)
இன்று கர வருடம் புரட்டாசி மாதம் 10ஆம் நாள் (27.09.2011) செவ்வாய்க்கிழமை அமிர்த மேல்சித்த யோகமும் அமாவாஸ்யை திதியும் உத்திரம் நட்சத்திரம் மாலை 6.16 மணிவரை பின்பு ஹஸ்தம்.
ராகு காலம்: காலை 03.00 முதல் 04.30 மணிவரை
எமகண்டம்: காலை 09.00 முதல் 10.30 மணிவரை, இரவு 01.30 முதல் 03.00 மணிவரை.
நல்ல நேரம்: காலை 07.45 முதல் காலை 08.45 மணிவரை, மாலை 04.45 முதல் மாலை 05.45 மணிவரை.
மேடம்
தீயவர்களின் நட்பினால் கவலை ஏற்படும், வியாபாரத்தில் மறைமுக போட்டிகள் ஏற்படும், செலவுகள் சற்று அதிகரிக்கும்.
அஸ்வினி: மனஸ்தாபம்
பரணி: போட்டி
கிருத்திகை 1ஆம் பாதம்: செலவு
இடபம்
புதிய வேலைத் திட்டங்களை நடைமுறைபடுத்தல், மனதில் சிறு பயங்கள் தோன்றும், பெரியோர்களின் புத்திமதிகள் வாழ்வை சிறப்பாக்கும்.
கிருத்திகை 2, 3, 4ஆம் பாதம்: புதியவழி
ரோகிணி: பதற்றம்
மிருகசீரிடம் 1, 2ஆம் பாதம்: ஆலோசனை
மிதுனம்
அஜீரணம் சம்பந்தமான நோய்கள் ஏற்படும், வியாபார முயற்சிகள் நட்டத்தை ஏற்படுத்தல், சாப்பாட்டில் விருப்பமின்மை ஏற்படும்.
மிருகசீரிடம் 2, 3ஆம் பாதம்: சுகயீனம்
திருவாதிரை: தோல்வி
புனர்பூசம்: வெறுப்பு
கடகம்
நாவுக்கு சுவையான உணவு கிடைக்கும், குடும்பத்தில் பெண்களின் அனுசரிப்பு அதிகரிக்கும், எதிர்பாராத நல்ல செய்திகள் கிடைக்கும்.
புனர்பூசம்: ஆதரவு
பூசம்: நல்ல செய்தி
ஆயில்யம்: ஆகாரம்
சிம்மம்
புதிய காரியங்கள் நட்டத்தை ஏற்படுத்தும், உடல் சோர்வுகள் ஏற்படும், பகைவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படும்.
மகம்: கவலை
பூரம்: நோய்கள்
உத்திரம் 1ஆம் பாதம்: நாவடக்கம்
கன்னி
பிறரின் உதவிகள் தேடி வருதல், அயல் தேசங்களிலிருந்து செய்தி கிடைக்கும், பணப் பிரச்சினைகள் சங்கடத்தை தரும்.
உத்திரம் 2, 3, 4ஆம் பாதம்: நட்டம்
அஸ்தம்: சஞ்சலம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: தகவல்
துலாம்
வியாபார முயற்சிகள் கால தாமத்தை ஏற்படுத்தும், அதிக அலைச்சல்கள் ஏற்படும், திருட்டுக்கள் ஏற்பட வாய்ப்புண்டு.
சித்திரை 3, 4ஆம் பாதம்: அலைச்சல்
சுவாதி: தாமதம்
விசாகம் 1, 2, 3ஆம் பாதம்: கவனம்
விருட்சிகம்
நெருங்கிய நண்பர்களின் சந்திப்பு கிடைக்கும், மேல் அதிகாரிகளுடன் பொறுமையுடன் செயற்படவும், பெண்களின் உதவி கிடைக்கும்.
விசாகம் 4ஆம் பாதம்: நன்மை
அனுசம்: நட்பு
கேட்டை: ஒற்றுமை
தனுசு
உண்ணும் உணவில் வெறுப்புத் தன்மை, தீயவர்களின் செயல்கள் மனஸ்தாபத்தை ஏற்படுத்தும், புதிய முயற்சிகள் தடைபடல்.
மூலம்: விருப்பமின்மை
பூராடம்: பின் தள்ளப்படும்
உத்திராடம் 1ஆம் பாதம்: பகை
மகரம்
உஷ்ணம் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும், மனதால் அலைச்சல் தோன்றும், நவீன சாதனைகளினால் மேன்மை அடையலாம்.
உத்திராடம் 2, 3, 4ஆம் பாதம்: சிரமம்
திருவோணம்: வெற்றி
அவிட்டம் 1, 2ஆம் பாதம்: சுகயீனம்
கும்பம்
வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும், செயல்களில் தவறுகள் ஏற்படும், தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படுதல்.
அவிட்டம் 3, 4ஆம் பாதம்: தடை
சதயம்: விரயம்
பூரட்டாதி 1, 2, 3ஆம் பாதம்: தோல்வி
மீனம்
குடும்பத்தில் உறவினர்களினால் சுபாகாரியங்கள் நடைபெறும், நவீன திட்டங்களினால் ஆதாயம், பெண்கள் பொறுமையுடன் செயற்படல்.
பூரட்டாதி 4ஆம் பாதம்: மகிழ்ச்சி
உத்திரட்டாதி: அனுசரிப்பு
ரேவதி: மேன்மை
33 minute ago
36 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
36 minute ago
54 minute ago