Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2011 ஜூன் 18 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றைய பலன்கள் (19.06.2011)
இன்று கர வருடம் ஆனி மாதம் 04ஆம் நாள் (19.06.2011) ஞாயிற்றுக்கிழமை. அமிர்த மேல் மரணயோகமும் சதுர்த்தி திதியும் திருவோணம் நட்சத்திரம் காலை 03.53 மணிவரை, பின்பு அவிட்டம்.
இராகு காலம் : காலை 4.30 முதல் 6.00 மணிவரை
எமகண்டம் : பகல் 12.00 முதல் 1.30 மணிவரை, இரவு 6.00 முதல் 7.30 மணிவரை.
இன்று சுபமுகூர்த்த தினம்
நல்ல நேரம் : காலை 8.30 முதல் 9.00 மணிவரை, மாலை 3.30 முதல் 4.30 மணிவரை.
மேடம்
அதிக செலவுகளினால் பணத்தட்டுபாடுகள் ஏற்படும், உஷ்ண சம்பந்தமான உபாதைகள் ஏற்படும், பிறரின் மூலம் செய்திகள் கிடைக்கும்.
அஸ்வினி: நற்செய்தி
பரணி: நலன் பாதிப்பு
கிருத்திகை 1ஆம் பாதம்: நஷ்டம்
இடபம்
அரசாங்க ஊழியார்களின் ஆதரவு கிடைக்கும், தனவரவு ஏற்படும், குடும்பத்தில் சொந்த பந்தங்களின் வருகையினால் உற்சாகம் ஏற்படும்.
கிருத்திகை 2, 3, 4: குடும்ப மகிழ்ச்சி
ரோகிணி: அனுகூலம்
மிருகசீரிடம் 1, 2: அதிர்ஷ்டம்
மிதுனம்
பெண்களின் உதவிகள் கிடைக்கும், புதிய காரியங்களை திட்டமிட்டு செய்தல், நல்ல செய்திகள் வந்து சேரும்.
மிருகசீரிடம் 2, 3: மகிழ்ச்சி
திருவாதிரை: அனுசரணை
புனர்பூசம்: தகவல்
கடகம்
தொழில் சம்பந்தமான இடமாற்றங்கள் ஏற்படும், அறுசுவையான உணவு கிடைக்கும், பொழுதுபோக்குகளில் மகிழ்ச்சியுடன் ஈடுபடலாம்.
புனர்பூசம்: ஆர்வம்
பூசம்: சுபம்
ஆயில்யம்: ஆகாரம்
சிம்மம்
திறமையான சாதனைகளை முன்னெடுத்தல், பணம் சேமிப்பதில் அதிக ஊக்கம் தேவை, மனதளவில் கஷ்டங்கள் ஏற்படும்.
மகம்: கவலை
பூரம்: உழைப்பு
உத்திரம் 1ஆம் பாதம்: முயற்சி
கன்னி
வரவு குறைந்து செலவுகள் அதிகரிக்கும், சில புதிய திட்டங்கள் அலைச்சலை தரும், மனதில் நிம்மதியின்மையும் பயமும் ஏற்படும்.
உத்திரம் 2, 3, 4: குழப்பம்
அஸ்தம்: வெறுப்பு
சித்திரை 1, 2ஆம் பாதம்: துன்பம்
துலாம்
நாவுக்கு இனிதான உணவுகள் கிடைக்கும், குடும்பத்தில் பெண்களினால் மகிழ்ச்சி ஏற்படும், நண்பர்களின் உதவிகள் கிடைக்கும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: அன்யோன்யம்
சுவாதி: நட்பு
விசாகம் 1, 2, 3: ஆகாரம்
விருட்சிகம்
விநோத விளையாட்டுகளில் ஆர்வம் அதிகரிக்கும், புதிய முயற்சிகளை மேற்கொள்ளுதல், தூர பயணங்கள் செல்வதனால் நன்மை.
விசாகம் 4: இன்பம்
அனுசம்: மனஅமைதி
கேட்டை: அனுகூலம்
தனுசு
வெளிதேசங்களிலிருந்து செய்திகள் கிடைக்கும், பல திறமையான சாதனைகளினால் மேன்மை, பிறரின் மூலம் உதவிகள் கிடைக்கும்.
மூலம்: தகவல்
பூராடம்: நன்மை
உத்திராடம் 1ஆம் பாதம்: சலுகை
மகரம்
தேவையற்ற பிரச்சினைகளினால் கவலை, திருடர்களிடம் மிக கவனம் தேவை, அதிக அலைச்சல்களை மேற்கொள்ளுதல்.
உத்திராடம் 2, 3, 4: நிம்மதியின்மை
திருவோணம்: துன்பம்
அவிட்டம் 1, 2: பயம்
கும்பம்
மேல் அதிகாரிகளின் ஒத்துழைப்புக்கள் கிடைக்கும், பெண்கள் தமது பணிகளை பொறுப்புடன் செய்தல், நவீன திட்டங்களை செயல்படுத்தல்.
அவிட்டம் 3, 4: அக்கறை
சதயம்: முன்னேற்றம்
பூரட்டாதி 1, 2, 3: உதவி
மீனம்
இசையில் ஈடுபாடு அதிகரிக்கும், தொழில் சம்பந்தமான இடமாற்றங்கள் ஏற்படும், மகான்களை தரிசிக்க வாய்ப்பு கிடைக்கும்.
பூரட்டாதி 4: ஆசீர்வாதம்
உத்திரட்டாதி: ஆர்வம்
ரேவதி: மகிழ்ச்சி
43 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago