Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2011 ஜூலை 30 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றைய பலன்கள் (31.07.2011)
இன்று கர வருடம் ஆடி மாதம் 15ஆம் நாள் (31.07.2011) ஞாயிற்றுக்கிழமை. சித்த மேல் மரணயோகமும் பிரதமை திதியும் பூசம் நட்சத்திரம் காலை 06.35 மணிவரை, பின்பு ஆயில்யம், அதிகாலை 5.13 வரை, பின்பு மகம்.
இராகு காலம் : காலை 04.30 முதல் 06.00 மணிவரை
எமகண்டம் : பகல் 12.00 முதல் 1.30 மணிவரை, இரவு 06.00 முதல் 07.30 மணிவரை.
நல்ல நேரம் : காலை 06.15 முதல் 07.15 மணிவரை, மாலை 03.15 முதல் 04.15 மணிவரை.
மேடம்
வியாபாரத்தில் பல புதிய வழிமுறைகளை கையாளுதல், மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும், பொருள் சேர்க்கை ஏற்படும்.
அஸ்வினி: நன்மை
பரணி: தகவல்
கிருத்திகை 1ஆம் பாதம்: இன்பம்
இடபம்
புதிய இடமாற்றங்களுக்கு வழியுண்டு, சாதுக்களை தரிசிக்க வாய்ப்பு கிட்டும், குடும்பத்தில் பெண்களின் உதவிகளை பெற்றுக்கொள்ளலாம்.
கிருத்திகை 2, 3, 4: நன்மை
ரோகிணி: ஆசீர்வாதம்
மிருகசீரிடம் 1, 2: ஆதாயம்
மிதுனம்
பணம் சம்பாதிப்பதில் ஊக்கம் தேவை, புதிய சாதனைகளை முன்னெடுப்பதால் வெற்றி, உடல் உஷ்ணம் அதிகரித்தல்.
மிருகசீரிடம் 2, 3: உயர்வு
திருவாதிரை: உபாதைகள்
புனர்பூசம்: ஆர்வம்
கடகம்
வரவுக்கேற்ற செலவுகளை மேற்கொள்ளவும், தேவையற்ற பிரச்சினைகள் அலைச்சலை தரும், திருடர்களிடம் மிக கவனம் தேவை.
புனர்பூசம்: சிக்கல்
பூசம்: துன்பம்
ஆயில்யம்: பயம்
சிம்மம்
குடும்பத்தில் மனதுக்கு மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும், தனவரவு ஏற்படும், புதிய நட்புக்கள் கிடைக்கும்.
மகம்: குடும்ப மகிழ்ச்சி
பூரம்: அதிர்ஷ்டம்
உத்திரம் 1ஆம் பாதம்: சுபம்
கன்னி
சாப்பாட்டில் வேண்டாத வெறுப்பு தன்மை, வியாபாரத்தில் புதிய முயற்சிகளை தவிர்க்கவும், தீயவர்களுடன் வீண் பேச்சுக்களினால் பகை.
உத்திரம் 2, 3, 4: நாவடக்கம்
அஸ்தம்: குழப்பம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: தடைகள்
துலாம்
மனதளவில் அலைச்சல்கள் ஏற்படும், பிறரின் மூலம் சலுகைகள் கிடைக்கும், பணவிடயங்களில் சற்று தாமதத்தை ஏற்படுத்தும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: காலதாமதம்
சுவாதி: ஆதாயம்
விசாகம் 1, 2, 3: சோர்வு
விருட்சிகம்
முயற்சி செய்த காரியங்கள் நஷ்டத்தை ஏற்படுத்தும், உடல் உபாதைகள் வந்து நீங்கும், செயல்களில் பதற்றம் ஏற்படும்.
விசாகம் 4: தேகசுகம்
அனுசம்: தடுமாற்றம்
கேட்டை: தோல்வி
தனுசு
பொழுதுபோக்குகளில் மகிழ்ச்சியுடன் ஈடுபடலாம், வியாபாரத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும், நண்பர்கள் தேடி வருதல்.
மூலம்: நட்பு
பூராடம்: சந்தோஷம்
உத்திராடம் 1ஆம் பாதம்: அனுசரணை
மகரம்
புதிய காரியங்களில் சிறு தடைகள் ஏற்படும், சிலவிதமான சிக்கல்கள் தோன்றும், அறிமுகமற்ற நபர்களினால் மனஸ்தாபம்.
உத்திராடம் 2, 3, 4: பின்னடைவு
திருவோணம்: கவலை
அவிட்டம் 1, 2: பகை
கும்பம்
அயல் தேசங்களிலிருந்து செய்திகள் கிடைக்கும், திறமையான சாதனைகளை முன்னெடுப்பதால் வெற்றி, அலைச்சல்கள் சற்று அதிகரிக்கும்.
அவிட்டம் 3, 4: தகவல்
சதயம்: களைப்பு
பூரட்டாதி 1, 2, 3: முயற்சி
மீனம்
சிக்கனமற்ற செலவுகளை மேற்கொள்ளல், புதிய முயற்சிகளில் தடுமாற்றங்கள் ஏற்படும், மனபயங்கள் வந்து நீங்கும்.
பூரட்டாதி 4: விரயம்
உத்திரட்டாதி: கலக்கம்
ரேவதி: பதற்றம்
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago