2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சிலி நாட்டு ஜனாதிபதி அறிவிப்பு

Super User   / 2010 மார்ச் 01 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிலி நாட்டில்  ஏற்பட்ட பூமியதிர்ச்சி காரணமாக அவசர நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சிலி நாட்டு ஜனாதிபதி மிச்சேல் பச்லட் அறிவித்துள்ளார்.

சிலி நாட்டில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட பூமியதிர்ச்சி காரணமாக சுமார் 700 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இரண்டு மில்லியனுக்கும் அதிகமான பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர். சுமார் 1000  பொதுமக்கள் வீடுகளை இழந்துள்ளனர்.

இந்த பூமியதிர்ச்சி ரிச்டர் அளவுகோலில் 8.8ஆக பதிவாகியிருந்தது.

சில பகுதிகளில் அவசரகால நிலை அமுல்படுத்தப்பட்டிருப்பதுடன், அடிப்படை வசதிகள்  துண்டிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .