2021 ஜூன் 19, சனிக்கிழமை

ஆப்கானிஸ்தானுக்கு ஈரான் ஜனாதிபதி விஜயம்

Super User   / 2010 மார்ச் 10 , மு.ப. 09:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈரான் ஜனாதிபதி மஹமூத் அகமதி  நிஜாட் ஆப்கானிஸ்தானுக்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீட் ஹர்சாயுடன் பேச்சுவார்த்தையில் ஈரான் ஜனாதிபதி ஈடுபடவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டுத் தலைவர்கள் பொருளாதார தொடர்புகளை விரிவுபடுத்துவது தொடர்பில் கலந்துரையாடவிருப்பதாக ஆப்கானிஸ்தான் ஜனாதிபதியின் பேச்சாளர் தெரிவித்தார்.

கடந்த வருடம் இரு நாட்டுத் தலைவர்களும் மீண்டும் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர், மஹமூத் அகமதி நிஜாட்டின் ஆப்கானிஸ்தானுக்கான முதலாவது விஜயம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .