2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

ஆளுங் கட்சியின் தலைவராக ஏர்டோவான்

Editorial   / 2017 மே 23 , மு.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

துருக்கியின் ஆளுங் கட்சியான நீதி மற்றும் அபிவிருத்திக் கட்சி, தமது கட்சித் தலைவராக, துருக்கி ஜனாதிபதி றிசெப் தய்யீப் ஏர்டோவானை, மூன்று ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர், மீண்டும் நியமித்துள்ளது. ஜனாதிபதி ஏர்டோவான், தனது அதிகாரங்களை விரிவாக்கிக் கொள்வதற்கான பொதுஜன வாக்கெடுப்பில் இணங்கப்பட்ட முக்கிய மாற்றத்தினைப் பயன்படுத்தியே, ஜனாதிபதி ஏர்டோவானை, தமது கட்சித் தலைவராக, நீதி மற்றும் அபிவிருத்திக் கட்சி நியமித்துள்ளது.  

துருக்கித் தலைநகர் அங்காராவில் இடம்பெற்ற நீதி மற்றும் அபிவிருத்திக் கட்சியின் சிறப்பு காங்கிரஸிலேயே, துருக்கிப் பிரதமர் பினாலி யில்ட்ரிமை, கட்சியின் தலைவராகப் பிரதியீடு செய்யும் ஒரேயொரு வேட்பாளரான ஜனாதிபதி ஏர்டோவான், கட்சித் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.  

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிப் பதவியை உருவாக்குவதற்கான மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு, கடந்த மாதம் 14ஆம் திகதி இடம்பெற்ற சர்வஜன வாக்கெடுப்பில், 51.4 சதவீதமானோர் ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், இம்மாதம் இரண்டாம் திகதி, நீதி மற்றும் அபிவிருத்திக் கட்சியில், ஜனாதிபதி ஏர்டோவான் இணைந்திருந்தார்.  

முன்னைய அரசியலமைப்பின்படி, ஜனாதிபதி, தனது அரசியல் கட்சியுடனான தொடர்புகளைத் துண்டிக்க வேண்டும் என்ற நிலையில், தான் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், 2014ஆம் ஆண்டு ஓகஸ்ட்டில், நீதி மற்றும் அபிவிருத்திக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து, ஏர்டோவான் விலகியிருந்தார்.  

இந்நிலையில், 2014ஆம் ஆண்டுக்குப் பின்னர் இடம்பெற்ற, நீதி மற்றும் ஜனநாயகக் கட்சியின் பாரியதொரு நிகழ்வில், ஆயிரக்கணக்கானோர் ஏர்டோவானுக்கு வரவேற்பளித்திருந்த நிலையில், ஏர்டோவான், 1,414 வாக்குளைப் பெற்றதாக, கட்சியின் பிரதித் தலைவரான ஹயட்டி யஸிஸி,  அறிவித்திருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .