2021 ஜூன் 17, வியாழக்கிழமை

உகண்டாவில் ஏற்பட்டுள்ள மண்சரிவில் 100 பேர் பலி

Super User   / 2010 மார்ச் 03 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

உகண்டாவில் ஏற்பட்டுள்ள மண்சரிவு காரணமாக, 100 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

உகண்டாவின் புடுடா மலைப்பகுதியிலேயே இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

குறித்த பிரதேசத்திற்கு அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் விரைந்திருப்பதுடன், அங்குள்ள நிலைமைகளை அவதானித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

புதையுண்டவர்களை மீட்கும் பணியில் மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

சுகாதார நிலையத்தில் தங்கியிருந்த 60 சிறுவர்களை காணவில்லை என்பதுடன், இவர்கள் உயிரிழந்திருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.

மண்சரிவினால் வீடுகள் மூடப்பட்டுள்ளதாகவும், சுமார் 300 பேர் காணாமல் போயிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .