Shanmugan Murugavel / 2015 நவம்பர் 20 , மு.ப. 02:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று அதிகாலை வேளையில், சந்தேகத்துக்கிடமான புகலிடக் கோரிக்கையாளர்களின் படகு ஒன்றை, கிறிஸ்மஸ் தீவுகளுக்கு அருகில் அவுஸ்திரேலியக் கடற்படையினர் இடைமறித்துள்ளதாக எல்லைக் காவற்படையின் தகவல் மூலங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், எட்டுப் பேரைக் கொண்ட மீன்பிடி மரப் படகொன்றை தாங்கள் அவதானித்ததாகவும், இந்தப் படகானது, அவுஸ்திரேலிய கடற்படையால் இடைமறிக்கப்பட்டு, ஸ்மித் மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அங்கு வைத்து, அவர்கள் வேறொரு கடற்படை கப்பலுக்கு மாற்றப்பட்டதாகவும் சில கிறிஸ்மஸ் தீவு வாசிகள் தெரிவித்துள்ளதானார்.
எனினும் டார்வினில் இடம்பெற்ற ஊடக நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட அவுஸ்திரேலியப் பிரதமர் மல்கொம் டேர்ண்புல்லிடம் இது பற்றி வினவியபோது, அவர் கருத்து எதனையும் தெரிவிக்க மறுத்து விட்டார். இதேவேளை, குடியேற்ற அமைச்சர் பீற்றர் டுட்டனின், பேச்சாளர் பெண்மணி ஒருவரும் தகவல்கள் எதனையும் வழங்க மறுத்துவிட்டார். எனினும், அவுஸ்திரேலியக் கடற்படையானது படகை இடைமறித்ததா என்று அரசாங்கம்உ உடனடியாக உறுதிப்படுத்த வேண்டும் என தொழிலாளர் கட்சியின் பேச்சாளரான ரிச்சர்ட் மர்லெஸ் தெரிவித்தார்.
2014ஆம் ஆண்டு 157 தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களைக் கொண்ட படகொன்று கிறிஸ்மஸ் தீவுக்கு வடக்கே மறிக்கப்பட்டதே, இறுதியாக அவுஸ்திரேலியாவை வந்தடைந்துள்ள படகு என்று பதிவிலிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026