2021 ஜூன் 17, வியாழக்கிழமை

நைஜீரியாவின் அமைச்சரவை கலைப்பு

Super User   / 2010 மார்ச் 18 , மு.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

நைஜீரியாவின் பதில் ஜனாதிபதி குட்லக் ஜோநாதன் நேற்று அமைச்சரவையைக் கலைத்துள்ளார்.

நைஜீரிய ஜனாதிபதி உமறு யாரடு சுகவீனமுற்றதை அடுத்து, கடந்த பெப்ரவரி மாதம் குட்லக் ஜோநாதன் பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டிருந்தார்.

குட்லக் ஜோநாதன் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு முயற்சிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குட்லக் ஜோநாதன் நேற்று அமைச்சரவையைக் கலைத்திருப்பதாக அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் தகவல்த்துறை  அமைச்சர் உறுதிப்படுத்தினார். எனினும், அமைச்சரவை கலைக்கப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை எனவும் அவர் கூறினார்.

இது இவ்வாறிருக்க, கடந்த நவம்பர் மாதம் சிகிச்சை பெறுவதற்காக சவூதி அரேபியாவிற்கு சென்றிருந்த உமறு யாரடு அண்மையில் நாட்டிற்கு திரும்பியுள்ளார். எனினும், அவர் பொதுமக்கள் மத்தியில் தோன்றவில்லை எனவும் நைஜீரிய செய்திகள் தெரிவிக்கின்றன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .