2025 செப்டெம்பர் 18, வியாழக்கிழமை

நாட்டை விட்டு வெளியேற மனைவி விரும்பினார்

Shanmugan Murugavel   / 2015 நவம்பர் 24 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவில், சகிப்புத்தன்மையற்ற இயல்பு அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ள இந்திய நடிகர் அமீர் கான், தங்களது வாழ்வில் முதன்முறையாக, இந்தியாவை விட்டு வெளியேற விரும்புவதாகத் தனது மனைவி தெரிவித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

'தனிநபராக, இந்த நாட்டின் பிரஜையாக, இங்கு என்ன நடக்கின்றது என்பதை நாம் பத்திரிகைகளில் வாசிக்கிறோம், செய்திகளில் பார்க்கிறோம். நிச்சயமாக நான், அச்சமடைந்துள்ளேன். அதை நான் மறுக்க முடியாது. இடம்பெற்ற பல சம்பவங்கள் தொடர்பாக நான் அச்சமடைந்துள்ளேன்" என்று அவர் தெரிவித்தார்.
ஊடகவியலுக்கான விருது வழங்கும் நிகழ்வொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

'கிரணுடன் (மனைவி) நான் கதைக்கும்போது அவர், 'நாம், இந்தியாவை விட்டு வெளியேற வேண்டுமா?" எனக் கேட்கிறார். அவர், தனது குழந்தையைப் பற்றிப் பயப்படுகிறார்" எனத் தெரிவித்தார்.

எந்தவொரு சமூகத்திலும், பாதுகாப்புப் பற்றிய உணர்வும் நீதி பற்றிய உணர்வும் காணப்படுவது அவசியமானது எனவும் அவர் தெரிவித்தார்.

அமீர் கானின் இந்தக் கருத்துக்களுக்கு, டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் போன்ற அரசியல்வாதிகளினதும் ஏனைய மக்களில் ஒரு பகுதியினரது ஆதரவும் கிடைத்துள்ள அதேவேளை, பி.ஜே.பி அரசியல்வாதிகளும் இன்னுமொரு பகுதி மக்களும், கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

இந்திய உள்விவகார அமைச்சினால், சில தினங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது, சமூகங்களுக்கிடையிலான வன்முறைகள், அதிகரித்திருக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X