2021 ஓகஸ்ட் 01, ஞாயிற்றுக்கிழமை

பாகிஸ்தானிலுள்ள தூதரக குண்டு தாக்குதல்;அமெரிக்கா கவலை

Super User   / 2010 ஏப்ரல் 06 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது  இடம்பெற்ற குண்டுத் தாக்குதலுக்கு அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது. 

அத்துடன், இந்த தாக்குதல்களில் 3 இராணுவத்தினரும், 4 போராளிகளும் கொல்லப்பட்டதாக தலிபான் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல்களில் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன.

முதலில் இராணுவத்தினருக்கும், போராளிகளுக்கும் இடையில் துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றது. இதன் பின்னர் பாரிய குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை,  பாகிஸ்தானின் வடகிழக்குப் பகுதியில் நேற்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில்  43 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

வடமேற்குப் பாகிஸ்தானில் நடைபெற்ற அரசியல் கட்சியின் ஊர்வலத்தின்போதே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. 

இந்த தாக்குதல்ச் சம்பவம் தொடர்பில் பாகிஸ்தான் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 









  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .