Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Editorial / 2017 மே 31 , மு.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
உத்தரப் பிரதேச, பெண்கள் விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் சுவாதி சிங் என்ற பெண் அமைச்சரால், மதுபான சாலையொன்று திறந்துவைக்கும் காட்சிகள் அடங்கிய புகைப்படங்கள், இணையத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து, உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், அதற்கான விளக்கத்தை அளிக்குமாறு, அமைச்சரிடம் கோரியுள்ளார்.
கோம்தி நகர் பகுதியில் அமைக்கப்பட்ட, ‘பி த பியர்’ எனும் மதுபானசாலையை, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவருடனும் அவருடைய மனைவியுடனும் இணைந்து திறந்து வைக்கும் காட்சிகள் அடங்கிய புகைப்படங்கள், கடந்த சனிக்கிழமை (27), இணையத்தளத்தில் வெளியிடப்பட்டிருந்தது. பீகார் மாநிலத்தில் மதுபான சாலைகள் மூடப்பட்டதைப் போன்றே, உத்தரப் பிரதேசத்திலுள்ள மதுபானசாலைகளையும் மூடிவிடுமாறு கோரி, அங்குள்ள பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், பெண்ணொருவர்,
மதுபானசாலையை திறந்துவைத்தமை, பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
அனுமதிப்பத்திரம் கூட இல்லாதவொரு மதுபான சாலையை அவர் திறந்து வைத்தமை, அரசியல் வட்டாரத்துக்குள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பகுஜன சமாஜ்ய கட்சியின் தலைவர் மாயாவதி பற்றி, சுவாதி சிங்கின் கணவரான தயா ஷங்கர் சிங்க கருத்துக்களை வெளியிட்டமைக்குப் பதிலடியாக, சுவாதி குறித்தும், அவருடைய மகள் குறித்து, மாயாவதி கருத்துக்களை வெளியிட்டு வந்தார். இதன்பின்னர், மாயாவதிக்கு எதிரான கருத்துகளையும் பிரசாரங்களையும் வெளியிட்டு பிரபல்யமடைந்த சுவாதி, கடந்த ஒரு வருடத்துக்கு முன்னரே அரசியலுக்குள் நுழைந்தார்.
லக்னோ சட்டமன்றத் தேர்தலில் சரோஜினி நகரில் வெற்றி பெற்ற பின்னரே, அவர் அமைச்சர் பதவியைப் பெற்றுக்கொண்டார்.
இந்நிலையில், இந்த மதுபானசாலையின் திறப்பு விழாவுக்குச் சென்றிருந்த பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட அவருடைய மனைவி, தனது உயரதிகாரியிடம் அறிவிக்காது, அனுமதியையும் பெறாது எவ்வாறு திறப்பு விழாவில் கலந்துக்கொண்டார்கள் என்பதற்கான விளக்கமும் கோரப்பட்டுள்ளது. திறப்பு விழாவுக்குச் சென்ற போது, இருவரும் கடமையில் ஈடுபடுவதாகவே, பதிவாகியுள்ளதாக லக்கோவின் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
எனினும் இந்தச் சம்பவம் தொடர்பில், பா.ஜ.கவின் பேச்சாளர், கருத்துகளை வெளியிடுவற்கு மறுத்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
42 minute ago
1 hours ago
2 hours ago