2021 ஜூன் 16, புதன்கிழமை

பயங்கரவாதியாக்கப்பட்ட அப்பாவி

Shanmugan Murugavel   / 2015 நவம்பர் 16 , பி.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனடாவில் வசிக்கும் சீக்கியரொருவர், பரிஸில் இடம்பெற்ற தாக்குதலில் சம்பந்தப்பட்டவர் என வெளியான செய்திகள் காரணமாக, அதிக ஆபத்தைத் தான் எதிர்நோக்குவதாக அந்நபர் தெரிவித்துள்ளார்.

வீரேன்டர் ஜுப்பால் என்ற இவர், கையில் ஐபாட் ஒன்றை வைத்துக் கொண்டு எடுத்த செல்பி, கையில் குரானை வைத்துக் கொண்டு தற்கொலை அங்கியையும் அணிந்து கொண்டிருப்பது போல, யாரோ ஒருவரால் மாற்றம் செய்யப்பட்டு, இணையத்தளங்களில் பகிரவிடப்பட்டது. சீக்கியராக இருந்த அவர், முஸ்லிமாக மதமாறியதாக, அச்செய்திகள் தெரிவித்தன.

இந்தச் செய்தி தொடர்ச்சியாகப் பகிரப்பட்டதோடு, பல ஊடகங்களும் அதை நம்பி செய்திகளை வெளியிட்டன. குறிப்பாக, ஸ்பெய்னைச் சேர்ந்த மிகப்பெரிய பத்திரிகைகளில் ஒன்று, இந்தச் செய்தியைப் பிரசுரித்தது. எனினும், அது தவறென்பது வெளிப்படுத்தப்பட்ட, அதற்கு மன்னிப்புக் கோரியுள்ளது.

இது குறித்துக் கருத்து வெளியிட்ட ஜுப்பால், 'எனது செல்பிகளை, பலர் மாற்றம் செய்து, பரிஸில் நான் தான் பிரச்சினைகளை ஏற்படுத்துபவனெனப் பகிர்கின்றனர். நான் இதுவரை பரிஸூக்குச் சென்றதில்லை. டேர்பன் அணியும் சீக்கியர் நான். கனடாவில் வசிக்கிறேன்" எனத் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .