Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Editorial / 2019 ஓகஸ்ட் 21 , பி.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவின் முன்னாள் உள்துறை அமைச்சரான ப. சிதம்பரத்தின் மீதான ஒன்பது ஆண்டு கால பகையைப் பழிதீர்க்கவே, அவரைக் கைது செய்ய இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தீவிரம் காட்டுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவின் முன்னாள் பிரதமரான மன்மோகன் சிங்கின் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி 2005ஆம் ஆண்டு இடம்பெற்றுவந்தபோது குஜராத் மாநிலத்தின் உள்துறை அமைச்சராக அமித் ஷா பதவி வகித்திருந்தார்.
இந்நிலையில், அப்போது குஜராத்தில் சொராபுதீன் ஷேக் என்பவர் குஜராத் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார். அந்தவகையில் அவருக்கு பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லக்ஷர்-ஈ-தொய்பாவுடன் தொடர்புள்ளது என குஜராத் பொலிஸார் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதேவேளை, குறித்த வழக்கின் சாட்சியாகக் கருதப்பட்ட துளசிராம் பிரஜாபதி என்பவரும் தப்பியோட முயற்சித்ததாகக் கூறி, 2006ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் அவரும் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார். அந்தவகையில், இந்த இரண்டு வழக்குகளில் அமித் ஷாவுக்கு தொடர்புள்ளது என இந்திய நடுவண் புலனாய்வுச் செயலகம் (சி.பி.ஐ) தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தின் மூலமாக அது நிரூபணமும் ஆனது. இதனால் அமித் ஷா தனது பதவியை இராஜினாமா செய்தார்.
சில நாட்கள் தலைமறைவாக இருந்த அவரை சி.பி.ஐ அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர் மூன்று மாதங்களுக்குப் பிறகு அவர் பிணையில் வெளியே வந்தார். அமித் ஷா 2010ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்டபோது உள்துறை அமைச்சராக ப. சிதம்பரமே இருந்திருந்தார்.
இந்நிலையில், தற்போது ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சி.பி.ஐ அதிகாரிகளால் கைதுசெய்யப்படும் சூழ்நிலைக்கு ப. சிதம்பரம் தள்ளப்பட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
16 May 2025