2021 ஜூன் 24, வியாழக்கிழமை

மெக்ஸிக்கோவில் பூமியதிர்ச்சி;இருவர் உயிரிழப்பு

Super User   / 2010 ஏப்ரல் 05 , மு.ப. 08:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

மெக்ஸிக்கோவில் நேற்று நள்ளிரவு இடம்பெற்ற பூமியதிர்ச்சி காரணமாக இருவர் உயிரிழந்துள்ளார்.

மெக்ஸிகோவிலுள்ள பஜாஜ் கலிபோர்னியா என்ற இடத்திலேயே இந்த பூமியதிர்ச்சி இடம்பெற்றுள்ளது.

இந்த பூமியதிர்ச்சி ரிச்டர் அளவுகோலில் 7.2ஆக பதிவாகியிருந்தது.

மெக்ஸிக்கோவில் இடம்பெற்ற இந்த பூமியதிர்ச்சியை முன்னிட்டு  அந்த நாட்டு அரசாங்கம் அவசரகாலச் சட்டத்தை பிரகடனப்படுத்தியுள்ளது.

இந்த பூமியதிர்ச்சி காரணமாக ஒரு சில மக்கள் வீடுகளில்  அகப்பட்டிருக்கும் அதேவேளை, மீட்புப் பணிகளில் உதவியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

1992ஆம் ஆண்டுக்குப் பின்னர் மெக்ஸிக்கோவில் ஏற்பட்ட மிகப்பெரிய பூமியதிர்ச்சியாக இது கருதப்படுகிறது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .