Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 மே 23 , மு.ப. 02:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
வாரயிறுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையொன்றை அடுத்து, தமது மத்தியதூர புக்குசொங்-2 ஏவுகணை, தரையிறக்கத்துக்குத் தயாராகவுள்ளதாக, வடகொரியா, நேற்று (22) தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம் (21) இடம்பெற்ற ஏவுகணை ஏவுதலை, வடகொரியாவின் தலைவர் கிம் ஜொங்-உன் மேற்பார்வையிட்டதாக, வடகொரிய அரசினால் நடாத்தப்படும் கொரிய மத்திய செய்தி முகவரகம் தெரிவித்துள்ளது.
சோதனை செய்யப்பட்ட ஏவுகணை, புக்குசொங்-2 எனவும், கொரிய மத்திய செய்தி முகவரகம் தெரிவித்துள்ளது. உடனடியாக ஏவப்படுவதற்காக, புக்குசொங்-2-இல் திடமான எரிபொருள் பயன்படுத்தப்படுகிறது.
ஏறத்தாழ, வடகொரியாவின் அனைத்து ஏவுகணைகளும் திரவ எரிபொருளினால் நிரம்பியவை என்ற நிலையில், ஏவுகணை ஏவப்படுவதற்கு முன்னர், உந்திகளில் திரவ எரிபொருள் நிரப்பப்பட்டிருக்கும். திடமான எரிபொருளைக் கொண்ட ஏவுகணைகளை, திரவ எரிபொருள் கொண்ட ஏவுகணைகளை விட மிகவும் வேகமாக ஏவமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், ஏவுவதில் தடையிட, நிறுத்தும் எந்தவொரு முயற்சிக்கான நேரமும் மிகவும் குறைக்கப்படும்.
திடமான எரிபொருளைப் பயன்படுத்தி, நீர்மூழ்கியியிலிருந்து வடகொரியா ஏவும் ஏவுகணையின் தரைவடிவமே புக்குசொங்-2 என, தென்கொரிய இராணுவ அதிகாரிகள், முன்னர் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், புக்குசொங்-2, மிகவும் துல்லியமானதோர் ஏவுகணையும் வெற்றிகரமானதொரு மூலோபாய ஆயுதமும் என, பெருமையுடன் தலைவர் கிம் தெரிவித்ததாகக் கூறியுள்ள கொரிய மத்திய செய்தி முகவரகம், இந்த ஏவுகணையை நடவடிக்கைக்காகத் தரையிறக்குவதற்கு, கிம் அனுமதியளித்துள்ளதாகக் கூறியுள்ளது.
மத்திரதூர வகையான ஏவுகணை என ஐக்கிய அமெரிக்காவினால் வர்ணிக்கப்பட்ட குறித்த ஏவுகணையானது, தெற்கு பியோன்கான் மாகாணத்தின் புக்சாங்கிலிருந்து ஏவப்பட்டதாகவும், 500 கிலோமீற்றர் வரை பயணித்து, ஜப்பான் கடலில் தரையிறங்கியதாகவும், தென்கொரியாவின் ஆயுதப் படைகள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், மேற்படி ஏவுகணை ஏவுதலை, ஐக்கிய அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் ஆகியவை கண்டித்துள்ளதோடு, இவை ஒன்றாக இணைந்து கோரிய, ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் அவசர கூட்டம், இன்று (23) நடைபெறவுள்ளது.
15 minute ago
22 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
22 minute ago