2021 ஜூன் 14, திங்கட்கிழமை

வெள்ளத்தாலும் மண்சரிவாலும் நேபாளத்தில் 33 பேர் பலி

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 27 , மு.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளம், மண்சரிவு காரணமாக, ஆகக்குறைந்தது 33 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் இன்னும் பலர் காணாமல் போயுள்ளதாகவும், உள்விவகார அமைச்சு இன்று தெரிவித்தது.

கடுமையான பருவக்காற்று மழை காரணமாக, ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதாகத் தெரிவித்த அவ்வமைச்சு, அதன் காரணமாக வெள்ளமும் மண்சரிவும் ஏற்பட்டு, வீடுகளை அழித்துள்ளதாகத் தெரிவித்தது.

நேபாளத் தலைநகர் காத்மண்டுவில் உள்ள பாடசாலையொன்று பகுதியளவில் உடைந்து வீழ்ந்ததில், இரண்டு மாணவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்

இந்நிலைமை தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த உள்விவகார அமைச்சின் பிரதிப் பேச்சாளர் ஜான்க நத் டகல், "பல மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்தாலும் மண்சரிவாலும், திங்கட்கிழமையிலிருந்து, 33 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு, 23 பேர் காணாமல் போயுள்ளனர்" எனத் தெரிவித்தார். ஹெலிகொப்டர்களையும் இறப்பர் படகுகளையும் பயன்படுத்தி, பாதிக்கப்பட்ட கிராமங்களிலிருந்து நூற்றுக்கணக்கானோரை, மீட்புப் படையினர் மீட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .