2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

வடக்கு ஒஸட்ரியா கார் குண்டு வெடிப்பில் 12 பேர் பலி

Kogilavani   / 2010 செப்டெம்பர் 08 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

alt

ரஷ்யாவின் தென் பிராந்திய குடியரசான வடக்கு ஒஸட்ரியாவில் இன்று இடம்பெற்ற கார் குண்டு வெடிப்பில் 12 பேர் கொல்லப்பட்டதுடன் 80 இற்கும் மேற்பட்டவர்கள் காயப்பட்டுள்ளதாக அரசஅதிகாரிகள் தெரிவித்ததாக இன்டபெக்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தள்ளது.

குறித்த வாகனம் விலடிகாவ்கஸ் நகரில் உள்ள பொதுச் சந்தைக்கு அருகாமையில் வெடித்துள்ளதாக அக்குடியரசின் தலைவர் டய்முறாஸ் மம்சுரோவ் இன்டர்பெக்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

'எனக்கு கிடைத்த தகவல்களின்படி இந்தக் குண்டு வெடிப்புடன் தொடர்புடைய நபர் தற்கொலைதாரியாக இருக்கலாம். அவர் காரை சந்தைக்கருகாமையில் செலுத்தி வந்து வெடிக்கச் செய்துள்ளார'என மம்சுரோவ் தெரிவித்துள்ளார்.

வடக்கு ஒஸட்ரியா மற்றும் கோகாசஸ் பிராந்தியங்கள் வன்முறைகளாலும் அரசியல் ஸ்திரமின்மையாலும் பாதிக்கப்பட்டுள்ளன.

கடந்த வருடங்களில் இந்த பொதுச் சந்தை மற்றுமொரு தீவிரவாதியின் தாக்குதலுக்குள்ளானமை குறிப்பிடத்தக்கது. 2008 ஆம் ஆண்டு பஸ்தரிப்பு நிலையத்தின்

அருகில் பஸ் ஒன்றிலிருந்து தற்கொலை குண்டுதாரி பஸ்ஸை வெடிக்க வைத்ததில் 12 பேர் கொல்லப்பட்டதுடன் 40 இற்கும் அதிகமானோர் காயப்பட்டனர். 1999 ஆம் ஆண்டு கொல்லப்பட்டதுடன் 300 பேர் காயப்பட்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .