2021 ஜூன் 18, வெள்ளிக்கிழமை

இந்திய காங்கிரஸ் கட்சித் தேர்தல் இம்மாதம் 17 இல்

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 03 , மு.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தெரிவு செய்வதற்கான தேர்தல் எதிர்வரும் 17 ஆம் திகதி  நடைபெறவுள்ளது.

இந்நிலையில்,   புதிய தலைவரை  தெரிவு செய்வதற்கான மேற்படி தேர்தலில் மாநில காங்கிரஸ் குழுப் பிரதிநிதிகள் 7,946 பேர் வாக்களிக்கவுள்ளனர்.

இதற்கான வேட்பு மனுக்கள் நேற்று வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று  வெள்ளிக்கிழமை மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. அத்துடன், எதிர்வரும் 21 ஆம் திகதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளதாகவும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

சோனியா காந்தி நேற்று கட்சியின் தேர்தல் பணிக்குழுத் தலைவர் ஆஸ்கர் பெர்னாண்டசிடம் வேட்புமனுத் தாக்கல் செய்தார். மேலும் சோனியா காந்தி சார்பில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், ராகுல் காந்தி, பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள், காங்கிரஸ் முதல்வர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சோனியா காந்தியை எதிர்த்துப்  போட்டியிடுவதற்கான வாய்ப்பில்லை என்பதால், காங்கிரஸ் கட்சித் தலைவராக  நான்காவது தடவையாகவும்  அவர் போட்டியின்றி தெரிவு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 1998 ஆம் ஆண்டு  முதன்முறையாக காங்கிரஸ் கட்சித் தலைவராக சோனியா காந்தி   தெரிவு  செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .