Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2010 செப்டெம்பர் 10 , மு.ப. 10:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய பீகார் மாநிலத்தில் கோஸி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மீளக்கட்டியெழுப்புவதற்காக 220 மில்லியன் நிதியுதவி வழங்க உலக வங்கி இணங்கியுள்ளது.
பீகாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 100,000 வீடுகள் 90 பாலங்கள் 290 கிலோ மீற்றர் நீளமான வீதிகள் ஆகியவற்றை புனரமைப்பதனூடாக வெள்ளப் பாதிப்பிலிருந்து மீட்சிக்கான முயற்சிகளுக்கு பீகார் கோஸி வெள்ள மீட்சி செயற்றிட்டம் நிதியுதவி வழங்கும் என உலக வங்கி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அவசரத் தேவை நிதியமொன்றை ஏற்படுத்துவதன் மூலம், பீகார் அரசாங்கத்தின் வெள்ள நிலைமையை முகாமைத்துவம் செய்யும் ஆற்றல், மக்களின் வாழ்வாதார மூலங்களை மீளமைத்தல், அவசரகால நிலைமையை எதிர்கொள்ளும் ஆற்றலை முன்னேற்றுதல் ஆகிய செயற்பாடுகளூடாக இனி வரும் ஆபத்துக்களை குறைக்கவும் உலக வங்கி திட்டமிடுகிறது.
அழிவுகளைக் கவனத்திற் கொண்டு பல தசாப்தங்களின் பின்னர் இந்திய அரசாங்கத்திற்கு உலக வங்கி நிதியுதவியளிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
பீகாரின் கடந்தகாலப் பாதிப்புக்களிருந்து கற்றுக் கொள்ளும் முறையை தாம் கொண்டு வருவோம் என உலக வங்கியின் இந்திய நாட்டுக்கான பணிப்பாளர் நாயகம் ரொபேர்டொ சாகா தெரிவித்தார்.
கடந்த 2008 ஆம் ஆண்டில் 5 மாவட்டங்களில் 3.3 மில்லியன் மக்களைப் பாதித்த மிக மோசமான கோஸி வெள்ள அனர்த்தத்தின் பின், நிதிஷ் குமாரின் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட வெள்ள நிவாரண வேலைகள் குறித்து உலக வங்கி வெளியிட்ட ஒரு அறிக்கையில் பாரட்டப்பட்டுள்ளன.
பீகாரில் ஏற்பட்ட கோஸி வெள்ளப்பெருக்கால் ஒரு மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ள அதேவேளை, 360 முகாம்களில் 460,000 மக்கள் தங்கவைக்கப்பட்டிருந்தனர். 500 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.
25 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
3 hours ago