2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

துருக்கி சர்வஜன வாக்கெடுப்புக்கு அமெரிக்கா, ஜேர்மனி வரவேற்பு

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 13 , மு.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

துருக்கியில் அரசியலமைப்பை மாற்றியமைப்பது தொடர்பான சர்வஜன வாக்கெடுப்பு முடிவுக்கு அமெரிக்கா, ஜேர்மனி ஆகிய நாடுகள் வரவேற்புத் தெரிவித்துள்ளன.

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் ஜேர்மன் வெளிவிவகார அமைச்சர் குயிடோ வெஸ்ரர்வெலி  ஆகியோர் இந்த வாக்கெடுபுத் தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு வரவேற்புத் தெரிவித்தனர்.

நாட்டின் இராணுவ ஆட்சிக்கால அரசியலமைப்புத் தொடர்பான மாற்றத்திற்கு துருக்கி மக்கள்  ஆதரவு வழங்கியுள்ளனர்.

இது தொடர்பாக நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சர்வஜன வாக்கெடுப்புக்கு ஆதரவாக 58 சதவீதத்தினர் வாக்களித்திருந்தனர்.  

ஐரோப்பிய ஒன்றியத்தின் தராதரத்திற்கு ஏற்ப அரசியலமைப்பில் பல மாற்றங்களைச் செய்வதற்கு துருக்கிய அரசாங்கம் விரும்புகிறது.

ஆனால், இம்மாற்றங்கள் நீதிச்சேவை மற்றும் ஏனைய விடயங்களில் அரசாங்கத்திற்கு கூடிய கட்டுப்பாட்டு அதிகாரத்தை வழங்கும் என விமர்சகர்கள் சிலர் தெரிவிக்கின்றனர்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .