2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

இஸ்ரேல் - பலஸ்தீனத் தலைவர்களை ஹிலாரி எகிப்தில் சந்திக்கிறார்

Kogilavani   / 2010 செப்டெம்பர் 13 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

altஅமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டனும் மத்திய கிழக்கிற்கான அமெரிக்காவின்  விசேட தூதுவர் ஜோர்ஜ் மிட்செலும் இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன் தலைவர்களை இன்று எகிப்தில் சந்திக்கவுள்ளனர்.

இஸ்ரேலியப்  பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹு மற்றும் பலஸ்தீன ஜனாதிபதி மொஹமட் அப்பாஸ் இருவரும் இன்று எகிப்தில்  சந்தித்து பேச்சு நடத்தவுள்ளனர். அவர்களை இன்று அமெரிக்கப் பிரதிநிதிகளும் சந்திக்கவுள்ளனர்.

இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத் தலைவர்களுக்கிடையில் நடைபெறும் இரண்டாவது சுற்று நேரடிப் பேச்சுவார்த்தை இதுவாகும். இவ்விருவரும் இம்மாத முற்பகுதியில் வாஷிங்டனில் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.

எதிர்வரும் 12 மாத காலத்திற்குள் சமாதான உடன்படிக்கையொன்றை ஏற்படுத்தும் நோக்குடன் இப்பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

இவ்விருவருடன் கிளின்டன் மற்றும் மிட்செல்  ஆகியோர் ஜெருஸலேம் நகரில்  நாளை புதன்கிழமை இந்த பேச்சுவார்த்தையை தொடர்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இஸ்ரேல் - பலஸ்தீனப் பிரச்சினைக்கு இரு நாடுகள் அடிப்படையிலான தீர்வொன்றை ஏற்படுத்தும் நோக்குடான இப்பேச்சுவார்த்தை ஹிலாரி கிளின்டன் முதல் தடவையாக கலந்துகொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

பில் கிளிண்டன் அமெரிக்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில், முதற்பெண்மணி என்ற வகையில் ஹிலாரி கிளின்டன் மத்திய கிழக்கிற்கு விஜயம் செய்து இஸ்ரேலிய, பலஸ்தீனத் தலைவர்களை சந்தித்தமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .