Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 ஏப்ரல் 11 , பி.ப. 02:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐவரி கோஸ்ட் ஜனாதிபதி லோறன்ட் பாக்போ இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்கு ஆபிரிக்க நாடான ஐவரி கோஸ்ட்டில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் அலஸ்ஸனே ஒட்டாரா வெற்றி பெற்றார். எனினும் ஜனாதிபதி பாக்போ பதவியிலிருந்து விலக மறுத்துவந்தார்.
சர்வதேச சமூகம் ஒட்டாராவையே ஜனாதிபதியாக அங்கீகரித்தது.
இதனால் பாக்கோவின் படைகளுக்கும் ஐ.நா. ஆதரவுடனான ஒட்டாவின் படைகளுக்கும் இடையில் கடும் மோதல்கள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில் பதவிவிலக மறுத்துவந்த பாக்போ அபிட்ஜான் நகரிலுள்ள ஜனாதிபதி மாளிகையிலிருந்து இன்று; கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாக்போ எவ்வாறு கைது செய்யப்பட்டார் என்பது தொடர்பில் முரண்பாடான தகவல்கள் உள்ளன.
'பாக்போ பிரெஞ்சு படைகளால் கைது செய்யப்பட்டு, கிளர்ச்சித் தலைவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார் என பிரான்ஸிலுள்ள பாக்போவின் உதவியாளரான டௌசெய்ன்ட் அலெய்ன் ராய்ட்டருக்கு தெரிவித்துள்ளார்.
எனினும் அவர் ஒட்டாராவின் படைகளால் கைது செய்யப்பட்டதாக பிரெஞ்சு தூதுவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இன்று ஐவரிகோஸ்ட் ஜனாதிபதி மாளிகையை நோக்கி பிரெஞ்சு இராணுவ தாங்கிகள் முன்னேறியதாக செய்திகள் வெளியாகின.
இது தொடர்பாக ஐ.நா.தூதுவர் யூஸுப்போவ் பாம்பா கூறுகையில் ஐவரி கோஸ்ட் படைகள் மாத்திரமே இக் கைதில் சம்பந்தப்பட்டன எனக் கூறினார். பாக்போ இழைத்த குற்றங்களுக்காக அவர் மீது விசாரணை நடத்தப்படும் எனவும் பாம்பா தெரிவித்தார்.
தேர்தலில் வெற்றி பெற்ற அலஸ்ஸனே ஒட்டாரா தங்கியுள்ள கோல்வ் ஹோட்டலுக்கு பாக்போ கொண்டுசெல்லப்பட்டதாக ஒட்டாராவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago