Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Super User / 2011 மார்ச் 25 , மு.ப. 10:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
மியன்மாரில் (பர்மா) நேற்று ஏற்பட்ட இரு பூகம்பங்களினால் குறைந்தபட்சம் 75 பேர் இறந்துள்ளதுடன் 110 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் இன்று வெள்ளிககிழமை தெரிவித்தனர்.
தாய்லாந்து, லாவோஸ் எல்லையில் ஏற்பட்ட இப்பகம்பத்தின் அதிர்வுகள் 800 கிலோமீற்றர் தொலைவிலுள்ள தாய்லாந்து தலைநகர் பாங்கொக், மற்றும் வியட்நாமின் ஹனோய், மற்றும் சீனாவின் சில பகுதிகளிலும் உணரப்பட்டன.
பர்மாவில் 240 கட்டிடங்கள் உடைந்துவீழ்ந்துள்ளன. தாய்லாந்திலும் 52 வயதான பெண்ணொருவர் இறந்துள்ளதாக தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இப்பூகம்பத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. தொலைதூர பகுதியில் இப்பூகம்பம் ஏற்பட்டதால் அங்கிருந்து செய்திகள் கிடைப்பது கடினமாகவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Jul 2025